மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
நளினிக்கு 9-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள்தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி பரோல் வழங்கப்பட்டது. தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் காவலுடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். நளினியின் பரோல் கடந்த மாதம் 8-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நளினிக்கு 9-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.