மோட்டார் சைக்கிள்கள் மோதல் ஒருவர் பலி
ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் ஒருவர் பலி
ரிஷிவந்தியம்
திருக்கோவிலூரை அடுத்த மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் உத்திரியநாதன்(வயது 40). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் உத்திரியநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.