அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

Update: 2023-05-26 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு, பெட்ரோல் பங்க் அருகே சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்