எலக்ட்ரீசியன் கொலையில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-06 18:45 GMT

குமாரபாளையம்

எலக்ட்ரீசியன் கொலை

குமாரபாளையம் நாராயண நகரில் உள்ள லட்சுமி நாராயணா தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவியை பிரிந்து, கார்த்திகேயன் தனியாக வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4-ந் தேதி குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மதுக்கடையில் கார்த்திகேயன் மது வாங்கி குடித்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஆனதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், கார்த்திகேயன் இரவில் தனது வீட்டின் முன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான தனபாலை வலைவீசி தேடி வன்தனர்.

ஒருவர் கைது

இந்தநிலையில் காவேரி நகர் பாலம் பிரிவு சோதனை சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தனபாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது:-

சம்பவத்தன்று கார்த்திகேயன், இவரது நண்பர்கள் தனபால், அரை பச்சை ஆகிய 3 பேரும் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது கார்த்திகேயன், தனபால் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், தம்பி சந்தோஷ்குமார் (30), அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது தனபால் சம்பவத்தன்று (இன்று) இரவுக்குள் உன்னை கழுத்து அறுத்து கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி சென்றதாக தெரிகிறது. இந்தநிலையில் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்ற தனபால், அரைபச்சை ஆகியோர் அவரை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரியவருகிறது.

இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் தான் நேற்று போலீசார் தனபாலை கைது செய்தனர். இவ்வாறு போலீசார் விசாரணயைில் தொிவித்தனர்.

மேலும் தலைமறைவான அரை பச்சை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்