கம்பத்தில்ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம்

தேனி மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது.

Update: 2023-03-27 18:45 GMT

தேனி மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் பரமன், ஒப்பந்த தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் மணிகண்டன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோட்டை குருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தூய்மை தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய அரசாணை 152-யை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 616 சம்பளம் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்