சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தையொட்டி மகுடேஸ்வரா் கோவிலில் சிறப்பு வழிபாடு
சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தையொட்டி மகுடேஸ்வரா் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தையொட்டி சிவகாமி சமேத ஆனந்த தாண்டவ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. அப்போது சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.