சுபமுகூர்த்த நாளையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் அலைமோதிய கூட்டம்

சென்னையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட கூடுதலான கூட்டம் நேற்று காணப்பட்டது.

Update: 2023-11-23 20:51 GMT

சென்னை,

பொதுவாகவே சுபமுகூர்த்த நாட்கள் என்றால் திருமண மண்டபங்கள், கோவில்களில் திருமண நிகழ்ச்சிகளும், அரசு அலுவலகங்களை எடுத்து கொண்டால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கும் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

அந்தவகையில் சென்னையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட கூடுதலான கூட்டம் நேற்று காணப்பட்டது. குறிப்பாக பெரியமேட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதலான கூட்டம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுகள் அதிகம் நடக்கும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை பதிவுத்துறை வழங்கி இருந்தது. அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டன. அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. முன்பதிவு செய்ய வந்தவர்களுக்கு காலதாதமின்றி உடனுக்குடன் பதிவுகளை செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்