குடியரசு தினத்தை முன்னிட்டுபஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

திருச்செந்தூர்:

குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

காயாமொழி

திருச்செந்தூர் யூனியன் காயாமொழி பஞ்சாயத்து குமாரசாமிபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில், திருச்செந்தூர் யூனியன் ஊர்நல அலுவலர் இந்துமதி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், குமாரசாமிபுரத்தில் உள்ள பொது நூலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, காயாமொழி சவுக்கை தெரு பொதுப்பாதையை சீரமைப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பஞ்சாயத்து துணை தலைவர் ராஜா, செயலாளர் இசக்கியம்மாள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நயினார்பத்து

நயினார்பத்து பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் அமுதவல்லிதிலிப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் அனைவருக்கும் திட்ட பணிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜகுமாரி, உறுப்பினர் ரேவதி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியை பேபி ராணி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

சிறுநாடார் குடியிருப்பு பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ர.கமலம் தலைமையில் நடைபெற்றது.

குலசேகரன்பட்டினத்தில் அசானியா நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ரா.சொர்ணபிரியா துரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கிராம திட்ட அண்ணா வளர்ச்சி பணிகள் வரவு செலவு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பற்றாளர் லட்சுமணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் இருந்தார்.

மணப்பாடு ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் கிரேன் சிட்டா வினோஜின் தலைமையில் நடைபெற்றது.

சேதுக்குவாய்த்தான்

ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி் யூனியன் தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் 100 நாட்கள் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துதல், திட்ட பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவராஜன், பொறியாளர் வெள்ளப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்