75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் டிராக்டர் பேரணி

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

Update: 2022-08-11 14:02 GMT

கிணத்துக்கடவு

75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறத. இதனையொட்டி கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் விவசாயி அணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். டிராக்டர் பேரணியை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் தொடங்கி வைத்தார். முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட டிராக்டர்களை 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 என்ற எண் வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் டிராக்டர் முன்பக்கம் தேசிய கொடிகள் கட்டப்பட்டு டிராக்டர் பேரணி அண்ணா நகர் பகுதியில் இருந்து புறப்பட்டது. பகவதிபாளையம், சிங்கராம்பாளையம், கல்லாங்காடு புதூரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மாநில பார்வையாளர் மோகன் மந்தராசலம், மாவட்ட விவசாய அணி தலைவர் தர்ம பிரகாஷ், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் கனகராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் பாபா ரமேஷ் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் அம்மன் இளங்கோ கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், பாரதீய கட்சியின் நிர்வாகிகள் தங்கராஜ், பான்சந்தர் ராஜ், செல்வேந்திரன்,ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்