லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்மண் சரிவால் விபத்து அபாயம்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-10-08 18:45 GMT

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தமிழக எல்லை பகுதியான குமுளி அமைந்துள்ளது. இங்கு பஸ் நிலையம் இல்லாததால் இங்கு வரும் அனைத்து பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், கேரள மாநிலங்களில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களும் குமுளிக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் லோயர்கேம்ப் - குமுளி மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு மண் குவியல்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் விழுந்து உள்ளது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து மண்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்