ஆண்டிப்பட்டியில் பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா

ஆண்டிப்பட்டியில் பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

Update: 2022-07-07 16:23 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொேரானா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் 72 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது. அதில் 12 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.

பின்னர் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 12 பேருக்கு தொற்று உறுதியானதால் அவர்களது பெற்றோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளியில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா பாதித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கலக்்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்