எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?-கனிமொழி எம்.பி. பதில்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.

Update: 2022-10-22 18:45 GMT

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் சரியான முறையில் விசாரித்து மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் அவா் நடவடிக்கை எடுப்பார்.

துப்பாக்கி சூடு விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது நியாயமான கேள்வி தான். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்