சிவசேனா கட்சி சார்பில் பிரதமர், ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவுக்கு சிலை அமைக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி சார்பில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது

Update: 2022-07-28 14:32 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவுக்கு சிலை அமைக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி சார்பில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதற்காக மாநில செயலாளர் குரு.அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் தேனி தபால் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு பிரதமர், ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், உள்துறை மந்திரி, மத்திய வனத்துறை மந்திரி, மத்திய கலாசாரத்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனுவை பதிவு தபாலாக அனுப்பினர். அதில், "தமிழகத்தில் கருணாநிதியின் பேனாவுக்கு நினைவு சிலை அமைக்க இருப்பதாக அறிகிறோம். ஏற்கனவே தமிழகத்தில் கடன் சுமையால் சொத்துவரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மக்கள் பணத்தில் இந்த சிலை அமைப்பதை கண்டிக்கிறோம். இதுகுறித்து விசாரித்து இதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதில் மாவட்ட தலைவர் கருப்பையா, மாவட்ட பொதுச்செயலாளர் முருகவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்