பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-13 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் மற்றும் குழந்தை நல செவிலியர் துறை இணைந்து கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி வழிகாட்டுதலின் படி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழாவை கொண்டாடின. கல்லூரி இணை பேராசிரியை ஹேமா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி கலந்து கொண்டு, தாய் பாலின் அவசியம் குறித்து பேசினார். குழந்தை நல டாக்டர் அரவிந்தசரதன், டாக்டர் சசிகலா ஆகியோர் தாய்ப்பால் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் பேசினர். கல்லூரி இணை பேராசிரியையும், மாணவ செவிலிய சங்கத்தின் ஆலோசகருமான சுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், செவிலியர்கள், ஏராளமான தாய்மார்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

மேலும், திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக "போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி" தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இணை பேராசிரியை ஹேமா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி போதை மருந்து ஒழிப்பு பற்றி கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையில், மாணவிகள் போதை மருந்து ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்