நிலத் தகராறில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை

வந்தவாசி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-06 17:31 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தகராறு

வந்தவாசியை அடுத்த கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மனைவி முனியம்மாள் (வயது 60). இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கருக்கும் (50) இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முனியம்மாள் மற்றும் அவருடைய கணவர் முனுசாமி இருவரும் நேற்று விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர், அவரது மனைவி எட்டியம்மாள் (48) ஆகியோர் முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் இருவரும் சேர்ந்து முனியம்மாளை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சென்று விட்டனர்.

கைது

தகவலறிந்த தெள்ளார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முனியம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கர், எட்டியம்மாள் ஆகியோர் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்