பிள்ளைதோப்பில் லாரி மோதி முதியவர் பலி

பிள்ளைதோப்பில் லாரி மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-02-13 19:09 GMT

ராஜாக்கமங்கலம், பிப்.14-

பிள்ளைதோப்பில் லாரி மோதி முதியவர் பலியானார்.

முதியவர் பலி

வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைதோப்பு பகுதியில் நேற்று இரவு 70 வயது முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் இறந்த முதியவர் பிச்சை எடுத்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்