சிறுபாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி
சிறுபாக்கம் அருகே கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அடுத்த அ.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 65), விவசாயி. இவர் நேற்று காலை தனது மொபட்டில் ரெட்டாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டாக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று, முருகேசன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.