செஞ்சி அருகே கார் மோதி முதியவர் பலி

செஞ்சி அருகே கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-10-15 18:58 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே வல்லம் பகுதியை சேர்ந்தவர் நய்யனார் (வயது 62). இவர் நேற்று காலை தனது சைக்கிளில் நாட்டார்மங்கலத்தில் இருந்து வல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நய்யனார் உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்