கிணற்றில் முதியவர் பிணம்

திண்டிவனம் அருகே கிணற்றில் முதியவர் பிணம் போலீசார் தீவிர விசாரணை

Update: 2022-12-05 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் தாலுகா சிங்கனூரை அடுத்த முட்டியூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 70). காணாமல் போன பசுமாட்டை தேடி சென்ற தேவராஜ் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் ரமேஷ், இவரது அக்கா மகன் மோகன் ஆகியோர் தேடிச்சென்றபோது அந்த பகுதியில் உள்ள கிணற்றின் கரையில் தேவராஜின் செல்போன் மற்றும் மாட்டின் கயிறு கிடந்தது. இதையடுத்து கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது அங்கே தேவராஜ் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு துறை வீரர்கள் 30 அடி ஆழ கிணற்றில் கிடந்த தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்