ஆற்றில் முதியவர் பிணம்
திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது64). இவர் திருச்சி மாவட்டம் திருவளர்சோலை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கிருந்த காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அவர் வழுக்கி ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். இதில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த அவர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம்பூண்டி காவிரி ஆற்றில் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.