ரெயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை

திண்டுக்கல்லில், ரெயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-18 16:46 GMT

திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு உடல் சிதைந்த நிலையில் முதியவர் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த அப்துல்மாலிக் (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் இவருடைய மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

எனவே அப்துல்மாலிக் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அப்துல்மாலிக் உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவர், மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்