இடத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை

சோழவந்தான் அருகே இடத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-10-07 20:37 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே இடத்தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

அடித்துக்கொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கீழப்பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. கறிக்கடை நடத்தி வந்தார். இவரது தம்பி மொக்கதுரை(வயது 70). இவர்கள் 2 குடும்பத்துக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கீழப்பெருமாள்பட்டி கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் மொக்கதுறை குடும்பத்தினர் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த காந்தியின் மனைவி பேச்சி (60), மகன்கள் மாரியப்பன், சின்னச்சாமி ஆகிய 3 பேரும் இடப்பிரச்சினை சம்பந்தமாக மொக்கதுரையிடம் தகராறு செய்தனர். அப்போது தகராறு முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள், கம்பால் தாக்கி கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த மொக்கதுரை, அவரது மகன் பிரகாஷ் ஆகியோரை உசிலம்பட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் மொக்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மோதல் சம்பவத்தில் மாரியப்பனை பிரகாஷ் குத்தியதில் கையில் காயம் ஏற்பட்டது.

2 பேர் கைது

இதுகுறித்து உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட போலீசார் வழக்குபதிவு செய்து மாரியப்பன், பேச்சி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சின்னச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கிராமத்தில் திருவிழா நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் சித்தப்பாவை கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்