லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-14 19:26 GMT

தாந்தோணிமலை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராம்நகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 65) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்