விபத்தில் மூதாட்டி படுகாயம்

விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-06-14 20:20 GMT

சிவகாசி,

திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 70). இவர் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பேச்சியம்மாள் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்