விபத்தில் மூதாட்டி பலி

புதுச்சத்திரம் அருகே விபத்தில் மூதாட்டி இறந்தார்.na

Update: 2023-06-21 18:48 GMT

புதுச்சத்திரம் அடுத்த ரெட்டிபுதூர் அருகே உள்ள அய்யம்புதூரில் ராஜாஜி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி கந்தாயி (வயது 78). இவர் நேற்று புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக நடந்து சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று மூதாட்டி கந்தாயியின் மீது மோதியது. இதில் கந்தாயியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கந்தாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்