விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் மூதாட்டி பலியானாா்.

Update: 2022-06-30 22:12 GMT

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 60). இவர் வெள்ளித்திருப்பூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் ெதரியாத இரு சக்கர வாகனம் காளியம்மாள் மீது மோதியது.

இந்த விபத்தில் காளியம்மாள் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே காளியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற இரு சக்கர வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்