சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.;
விருதுநகர்,
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்களில் வெடி விபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அண்மையில் சிவகாசி அருகே நேரிட்ட இருவேறு பட்டாசு ஆலை விபத்துகளில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் இன்று வருவாய்த்துறை, காவல்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய 4 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா, விதிமீறல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.