மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை

ஆண்டிப்பட்டி பகுதியில் மதுபான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-06 18:45 GMT

தேனி மாவட்டத்தில் செயல்படும் தனியார் மதுபான கடைகளில் போலி மதுபானங்கள் மற்றும் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் கடைகளில் ஆய்வு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் தனியார் மதுபான கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரசு கிட்டங்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்களை தவிர வெளிமாநில மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா?, நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கப்படுகிறதா? என்பது குறித்து மதுபான விற்பனையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். சோதனையின்போது ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் வெளிமாநில மதுபானங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்