ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் அவகாசம் அளித்தனர்.

Update: 2023-05-13 18:40 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடிசைகள் போடப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரப்புகளை அகற்றி விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன், மண்டல துணை தாசில்தார் பாக்யராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மனோகரன், தீரன் சின்னமலை, சேஷாத்திரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

அப்போது வேப்பூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வரதராஜன் தலைமையில் பொதுமக்கள், அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் ஒரு வார கால அவகாசம் அளித்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்