பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு

பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-09-13 19:00 GMT

பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

பாரம்பரிய நெல் விதைகள்

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு பருவமான சம்பா பருவத்துக்கு ஏற்ற (ஆகஸ்டு - நவம்பர் மாதங்களில்) பயிரிட ஏற்புடைய அரியவகை நெல் ரகங்கள், உடலுக்கு, நரம்புகளுக்கு சத்து தரக்கூடிய பாரம்பரிய நெல் விதைகள் தற்போது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உள்ளது.

தமிழக அரசின் "நெல் ஜெயராமன்" பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுணி, தூய மல்லி, சீரக சம்பா, அறுபதாம் குறுவை போன்ற நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு முழு விலை ரூ.25 மானியம் 50 சதவீதம் நீங்கலாக ரூ.12.50 மட்டும் ஒரு கிலோவிற்கு என்ற வீதத்தில் பணம் செலுத்தி விதைகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நபருக்கு மட்டும்...

தமிழக அரசின் இந்த சிறந்த திட்டத்தின் கீழ் பயனடைய, விவசாயி கிருஷ்ணகிரி வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விவசாயி தனது ஆதார், சிட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றினை கொண்டு வந்து வேளாண் விரிவாக்க மையத்தில் கொடுத்து மேற்கண்ட விதைகளை பெற்றுச்செல்லாம்.

ஒரு நபருக்கு ஏதேனும் ஒரு ரக நெல் மட்டுமே வழங்க இயலும். எனவே, இந்த அரிய வாயப்பினை பெருவாரியான விவசாயிகள் தவறாது பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்