விதையின் தரத்தை அறிய விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு
விதையின் தரத்தை அறிய விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை விற்பனையாளர்கள், தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விதை மாதிரி எடுத்து உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு ரூ.80 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.