மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா

மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-01-02 18:45 GMT

நெல்லை மேலப்பாளையம் சந்தை ரோட்டில் மாநகராட்சி 50-வது வார்டு கவுன்சிலரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவருமான ரசூல் மைதீன் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்தார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, காங்கிரஸ் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்