தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்53 வராக்கடன் கணக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடியில் நடந்த மக்கள் கோர்ட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 53 வராக்கடன் கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-12 18:45 GMT

தூத்துக்குடியில் நடந்த மக்கள் கோர்ட்டில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 53 வராக்கடன் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மக்கள் கோர்ட்டு

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தேசிய மக்கள் கோர்ட்டு (லோக் அதாலத்) நடந்தது. இதில் தூத்துக்குடி மண்டலத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளைகளில் உள்ள நீண்டகால வராக்கடன்களுக்கு தீர்வு காண்பதற்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி விருதுநகர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வங்கி கிளைகள் விருதுநகர் கோர்ட்டிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் தூத்துக்குடி, திருச்செந்தூர் கோர்ட்டிலும் கலந்து கொண்டனர். வங்கி சார்பில் அதன் கிளை மேலாளர்கள், மண்டல முதன்மை மேலாளர் ஜி.நாகேசுவரன், மண்டல சட்ட மேலாளர் கிளாட்சன் மார்ஷல் ஆகியோர் பங்கேற்றனர்.

ரூ.42 லட்சம்

இதில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 53 வராக்கடன் கணக்குகள் சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டன. அதில் 45 கடன் கணக்குகளுக்கு முழு தொகையான ரூ.42 லட்சம் வராக்கடன் தொகை பெறப்பட்டு வழக்கு உடனடியாக முடித்து வைக்கப்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறும் போது, தூத்துக்குடி மண்டலத்தில் நடப்பாண்டில் இதுவரை மக்கள் கோர்ட்டு மூலம் 225 வராக்கடன்கள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. வங்கி கடன்வசூல் இலக்கை நெருங்கி வருகிறது. மேலும் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி கொடுக்க புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்