அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு: செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-02-15 15:08 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனுவை நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை இன்று( நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்