செங்கல் சூளை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு
செங்கல் சூளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் சிலர் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், புகழூர் வட்டம், கோம்புபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்தனூர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு அருகே செங்கல் சூளை அமைக்க தனிநபர் முயற்சித்து வருகிறார். இங்கு செங்கல் சூளை அமைந்தால் புகை அதிகமாகி சுவாச பிரச்சினை ஏற்படும். எனவே செங்கல் சூளை அமைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என அதில் கூறியிருந்தனர்.