மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனசிதைவு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனசிதைவு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு;

Update:2022-06-02 21:02 IST

நாமக்கல்:

மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனசிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மனநல மருத்துவர் ஜெயந்தி தலைமையில் உறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது அவர், மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, என் வாழ்வில் மட்டும் அல்லாது எனது சமூகத்திற்கும் அதை நிலைநாட்ட பாடுபடுவேன். என்னிடம் வரும் மனநல நோயாளிகளுக்கு என்னால் இயன்ற உதவியையும், பாதுகாப்பையும் அளிப்பேன் என உறுதிமொழியை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இதில் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்