கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

கண்மாயை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

Update: 2023-08-19 19:21 GMT

காரியாபட்டி,

கண்மாயை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கண்மாய்

காரியாபட்டி தாலுகா பாப்பணம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலான நிலங்கள் தரிசாக காணப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் போதுமான அளவு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது.

கருவேல மரங்கள்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள கண்மாயை நம்பி தான் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். இந்த கண்மாயில் முழுவதுமாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத அளவிற்கு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் விவசாயத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை பார்வையிட்டு கருவேல மரங்களை அகற்றுவதுடன், தண்ணீர் தடையின்றி வருவதற்கும், சேமித்து வைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்