டிடிவி தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!
டிடிவி தினகரனின் அரசியல் பயணம் சிறக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், எனது அன்புச் சகோதரருமான டிடிவி தினகரன் அவர்களின் 60-வது பிறந்த நாளினை முன்னிட்டு அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்றவும், அவருடைய குறிக்கோள் நிறைவேறவும், அவருடைய அரசியல் பயணம் சிறக்கவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.