ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கொண்டாட்டம்

ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கொண்டாடினர்.

Update: 2022-08-17 19:39 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நெல்லையில் மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜெயலலிதா பேரவை மாவட்ட அவைத்தலைவர் கணபதி சுந்தரம், பொருளாளர் நாராயணன், நாங்குநேரி ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்