பாரதிராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த ஓ.பன்னீர்செல்வம்!

இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

Update: 2022-09-29 10:26 GMT

சென்னை,

சமீபத்தில் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தரகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் நலமுடன் வீடு திரும்பினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த கமல்ஹாசன், ''நலம் பெற்று வீடு திரும்பிய பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். ஓகே சீ யூ லேட்டர் ஃபார் ஷூர் (Ok see you later for sure, Bye) என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்'' தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நலம் பெற்று வீடு திரும்பியிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் சிஷ்யர் கே. பாக்யராஜ் சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்