சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை?
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு, யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.