சத்துணவு ஊழியர்கள் பிரசார நடைபயணம்

பகண்டை கூட்டுரோட்டில் சத்துணவு ஊழியர்கள் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

Update: 2022-06-10 16:16 GMT

ரிஷிவந்தியம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயண நிகழ்ச்சி பகண்டை கூட்டுரோட்டில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயா கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவி, பிரசார நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மாநில தலைவர் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனாமேரி, மாநில செயலாளர் சுமதி, பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பிரசார நடைபயணத்தில் ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் தெய்வானை, ரத்னா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏசுமணி, சுந்தரராஜன், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்