கணவர் கண்டித்ததால் நர்சு தற்கொலை

சிவகாசியில் செல்போனில் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த நர்சு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-21 19:07 GMT

சிவகாசி, 

சிவகாசியில் செல்போனில் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த நர்சு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செல்போனில் பேச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள வெள்ளைகோட்டை சேர்ந்தவர் வாழவந்தான். இவரது மகள் அருணாதேவி (வயது 26) என்பவருக்கும், சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ் என்பவருக்கும் கடந்த 10.9.2021-ல் திருமணம் நடந்தது.

அருணாதேவி, சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் அருணாதேவி தனது செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதை ரமேஷ் கண்டித்தாக கூறப்படுகிறது.

விஷம் குடித்தார்

பின்னர் அருணாதேவியின் செல்போனை, ரமேஷ் வாங்கி வைத்துக்கொண்டார். இதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி காலை அருணாதேவி தனது கணவரிடம் செல்போனை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ் செல்போனை திருப்பி தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த அருணாதேவி வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருத்த ரசாயன திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு அவர் சிகிச்சை பெற்றார். அப்போது அவர் திடீரென ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அருணாதேவி பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அருணாதேவியின் தாய் பாண்டியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் நர்சு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்