பிரபல கொள்ளையனுக்கு 3 ஆண்டு ஜெயில்

பிரபல கொள்ளையனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-10 19:30 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கோணசெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 76). இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சேலம் ஜட்ஜ் ரோட்டில் நடந்து சென்ற போது மர்மநபர் ஒருவர் 6 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (47) என்பவரை கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசாரால் சீனிவாசன், பிரபல கொள்ளையனாக கருதப்பட்டார். இந்த வழக்கில் சேலம் 4-வது ஜூடிசியஸ் மாஜிதிஸ்ரேட்டு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சீனிவாசனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு கூறினார்.

இதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த ரத்தினம் (75) என்ற மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த வழக்கிலும் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் அதே கோர்ட்டில் நடந்தது. இதிலும் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்