சீர்காழி, செம்பனார்கோவில், மணல்மேடு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

சீர்காழி, செம்பனார்கோவில், மணல்மேடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-08-16 00:15 IST

சீர்காழி:

சீர்காழி, செம்பனார்கோவில், மணல்மேடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி

சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் திட்டை உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருகாவூர், குளத்துங்கநல்லூர், விநாயககுடி, கீராநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்புங்கூர் மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கதிராமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, பெருமங்கலம், சேத்தூர், தர்மதானபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலினை சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்தார்.

செம்பனார்கோவில்

செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்திலும், பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செம்பனார்கோவில் மின்பாதையிலிருந்து மின்வினியோகம் பெரும்பகுதிகளான கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, பரசலூர் மெயின்ரோடு, கருவாழக்கரை, கஞ்சாநகரம், மேலையூர், கீழையூர், ஆகிய இடங்களிலும், இதேபோல் பொறையாறு, துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் சாத்தனூர் மின்பாதையில் மேற்கொள்ள உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெரும், பகுதிகளான காட்டுச்சேரி, காராம்பள்ளம் தேவானூர், எடுத்துக்கட்டிசாத்தனுர், பாலூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி. ஆத்துப்பாக்கம், மாங்குடி ஆகிய இடங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற் பொறியாளர்அப்துல் கலாம் மரைக்காயர் தெரிவித்தார்.

மணல்மேடு

மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கிழாய், களத்தூர், உத்திரங்குடி, மணல்மேடு நகரம், விருதாங்கநல்லூர், ராதாநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்