இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோி பகுதியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 221 போ் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையிலும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பெண்கள் அடங்குவர். மேலும் 5 பெண்கள், 1 திருநங்கை உள்பட 156 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஷசாராயம் குடித்து உயிர் தப்பிய முருகன் மனைவி சாரதா(வயது 50) என்பவர் கூறியதாவது:-
நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். கடந்த புதன்கிழமை காலையில் நான் வேலைக்கு சென்றுவிட்டேன். எனது கணவா் முருகன், சாராயத்தை வாங்கி குடித்து விட்டு பின்னா் அதை ஒரு கேனில் ஊற்றி வைத்து விட்டு தூங்கிவிட்டாா். பின்னா் நான் வேலைக்கு சென்று வந்ததும், தாகமாக இருந்ததால் அதை தண்ணீா் என நினைத்து குடித்தேன்.
அப்போது எனது கணவா் திடீரென வாந்தி எடுத்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த நான் எனது உறவினா்களை அழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். பின்னா் சிறிது நேரத்தில் எனக்கும் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றேன். பின்னா் நாங்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சோிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். ஆனால் செல்லும் வழியிலேயே எனது கணவா் இறந்து விட்டாா். நான் மட்டும் புதுச்சோிக்கு சென்றேன்.
எனது கணவா் இறந்தது பற்றி எனக்கு தகவல் வந்தபோது நான் செல்ல வேண்டும் என்று தொிவித்தேன். ஆனால் என்னை டாக்டா்கள் அனுப்ப மறுத்துவிட்டனா். இதனால் எனது கணவாின் முகத்தை கூட பாா்க்க விடாமல் அவரை அடக்கம் செய்து விட்டனா். தற்போது மருத்துவமனையில் இருந்து வந்து விட்டேன். ஆனால் எனது கணவா் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாராயம் விற்பதை தடுக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.