வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து

காந்திநகரில் வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-22 18:11 GMT

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் அருகே இன்று மாலை 6.30 மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய அபானி சரணியா என்பவரை மர்மநபர் ஒருவர் திடீரென கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டனர். உடனே அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, விருதம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அபானி சரணியாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில வாலிபரை கத்தியால் குத்தியவர் யார்? என்பது குறித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்