டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியர் கைது

டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-17 17:48 GMT


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் தனியாா் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 95 மீட்டர் தாமிர கம்பிகளை திருடு போனதாக, தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடியவர் யார்? என்று தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த பீகார் மாநிலம், நார்காட்டிய கஞ்ச் தாலுகா, ரோரி கிராமத்தை சேர்ந்த மகேந்திர மிஷ்ராவின் மகன் மனிஷ்குமார் மிஷ்ரா (வயது 33) என்பவர் தனது கால்களில் தாமிர கம்பிகளை சுற்றி மறைத்து கொண்டு திருடி வெளியே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதைடுத்து மனிஷ்குமார் மிஷ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த தாமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்