கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து வாழையிலை விரித்து அதன் மீது மாவிலை, வேப்பிலை மற்றும் சில வேளாண் விளை பொருட்களை வைத்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், ''எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்தி 2021-22-ம் ஆண்டு நிதி ரூ.2 ஆயிரத்து 300 கோடியை காப்பீடு செலுத்திய விவசாயிகக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்'' என்றனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.