அமைப்புசாரா ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்று சமர்ப்பிக்க வேண்டும்
அமைப்புசாரா ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா 17 வாரியங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2023-ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றை சமர்பிக்க வேண்டும். அதன்படி ஏப்ரல் மாதம் முதல் அலுவலகத்திற்கு வராமல் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவேற்றம் செய்து தொடர்ந்து ஓய்வூதியம் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.